Skip to main content

பிரதமருடனான ஆலோசனை கூட்டம்; தாமதமாக வந்து உடனே கிளம்பிய மம்தா? 

Published on 28/05/2021 | Edited on 28/05/2021

 

pm modi

 

வங்கக்கடலில் உருவான யாஷ் புயல், கடந்த 26 ஆம் தேதி ஒடிஷா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கிடையே கரையை கடந்தது. இதனையொட்டி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பிரதமர் மோடி, ஒடிசா முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.

 

இதனைத்தொடர்ந்து மேற்குவங்கம் சென்ற பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் மம்தா மற்றும் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்துவதாக இருந்தது. இந்தநிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தாவும், மேற்குவங்க தலைமை செயலாளரும் 30 நிமிடங்கள் தாமதமாக ஆலோசனை கூட்டத்திற்கு வந்ததாகவும், வந்தவுடன் புயல் தாக்கம் குறித்த பேப்பர்களை வழங்கிவிட்டு வேறு கூட்டங்கள் இருப்பதாக கூறி உடனடியாக சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்