மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலையில், நான்காவது கட்ட தேர்தல் இன்று (10.04.2021) நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, முஸ்லிம்கள் தங்கள் வாக்குகளைப் பிளவுபடாமல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்க வேண்டும் என கூறியது தொடர்பாக விளக்கம் கேட்டு மம்தாவிற்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
மேலும், மத்திய படைகள் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்தும், அதுகுறித்து விளக்கம் கேட்டும் இந்திய தேர்தல் மம்தாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், மம்தாவின் பாதுகாப்பு அதிகாரி, அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி, அந்தப் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக மேற்கு வங்க அரசு கூறியுள்ளது.