Published on 09/01/2021 | Edited on 09/01/2021

மகாராஷ்டிரா மாநிலம், பண்டாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் இன்று (09/01/2021) அதிகாலை 02.00 மணிக்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பச்சிளங்குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 7 பச்சிளங்குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தியதாகவும், தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.