'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (27/09/2020) காலை 11.00 மணிக்கு நாட்டுக்கு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது; "கரோனா குடும்பங்களை ஒன்றாக இணைத்துள்ளது. தமிழகத்தில் வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பாரம்பரியம் சிறப்பானது. தமிழகத்தைச் சேர்ந்த வித்யா என்பவர் புராணங்களைக் கதையாகக் கூறுவதை செய்து வருகிறார். பஞ்ச தந்திர கதைகள் போன்றவை இந்தியாவின் சிறப்பான பாரம்பரியத்தை உணர்த்துகிறது. ஒவ்வொரு குடும்பமும் வாரத்தில் ஒருநாள் ஒன்றாக அமர்ந்து குழந்தைகளுக்கு கதை சொல்லலாம். சுதந்திர போராட்டத்தில் இந்தியா சந்தித்த பிரச்சனைகளை கதைகள் மூலம் எடுத்துரைக்க வேண்டும். தமிழகத்தில் விவசாயிகள் கூட்டுறவு அமைப்பு மூலம் வாழை, காய்கறிகள் கொள்முதல் செய்தனர். வாழை மற்றும் காய்கறிகளைக் கொள்முதல் செய்து சென்னை நகருக்கு அனுப்பி வைத்தார்கள்.
புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் தற்போது தற்சார்பு நிலையை எட்டியுள்ளனர். வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை எங்கும் விற்க வாய்ப்புகள் உள்ளன. வேளாண் சட்டங்கள் மூலம் விளைபொருட்களுக்கு அதிகபட்ச விலையை விவசாயிகள் பெற முடியும். இந்திய சார்பு நிலையை எட்டுவதில் விவசாயிகளின் பங்கேற்பு முக்கியமானது." இவ்வாறு பிரதமர் பேசினார்.