Published on 10/05/2020 | Edited on 11/05/2020

இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. ஊரடங்கு பிறப்பித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வரும் நிலையிலும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது அரசுகளுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இதற்கிடையில் கரோனா வைரஸின் தாக்கம் ஜூன் மாதத்தில் இந்தியாவில் உச்சமாக இருக்கும் பல்வேறு நோய்த் தடுப்பு வல்லுநர்கள் எச்சரித்த நிலையில், ஜூனில் நிடைபெறும் மழைக்காலக் கூட்டத் தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறும். மழைக்கால கூட்டத்தொடரை ஒத்திவைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று மக்களவைச் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.