Published on 23/01/2019 | Edited on 23/01/2019
ஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை இந்திய நிறுவனமான எல்.ஐ.சி கைப்பற்றியுள்ளது.
ஐடிபிஐ மற்றும் எல்.ஐ.சி இரண்டுக்குமான வர்த்தகப் பேச்சு வார்த்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நடந்துவருகிறது. அதன்பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம், ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகளை வாங்க எல்.ஐ.சி நிறுவனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலை அளித்தது. அதனை தொடர்ந்து தற்போது ஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளைக் கைப்பற்றி ஐடிபிஐயின் பெரும்பான்மை பங்குதாரராக எல்.ஐ.சி இருக்கிறது.
ஐடிபிஐ வங்கி கடந்த செப்டம்பர் காலாண்டில் நிகர இழப்பு ரூ. 3,602.49 கோடி என பதிவு செய்துள்ளது. மேலும் அதன் மொத்த வராக்கடன் 31.78% என்பதும் குறிப்பிடத்தக்கது.