Published on 23/06/2023 | Edited on 23/06/2023

கிணற்றுக்குள் சிக்கிய சிறுத்தையை மீட்பதற்காக வனத்துறையினர் செய்த வினோத முயற்சி குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடகாவில் கிராமம் ஒன்றிலிருந்த வீட்டின் கிணற்றில் சிறுத்தை ஒன்று விழுந்தது. சிறுத்தைப் புலியைக் கிணற்றுக்குள் இருந்து வெளியே கொண்டு வர பல்வேறு முயற்சிகளை வனத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஒன்றாகச் சேர்ந்து மேற்கொண்டனர். இருப்பினும் புலி வெளியே வரவில்லை. இதனால் மரக்கோள்களால் உருவாக்கிய ஏணியைக் கிணற்றுக்குள் இறக்கிய வனத்துறையினர், பெரிய கோள் ஒன்றில் பந்தம் ஒன்றைப் பொருத்தி கிணற்றுக்குள் காட்டினர். தீயைப் பார்த்ததும் பயந்த சிறுத்தையானது ஏணி மேல் ஏறி கிணற்றிலிருந்து வெளியே வந்து வீட்டின் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி வனத்திற்குள் ஓடியது. தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.