உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியி போட்டியிடும் ராகுல் காந்தியை எதிர்த்து அக்கட்சியின் மறைந்த மூத்த தலைவர் ஹாஜிசுல்தான் கானின் மகன் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.
ராகுல் அரசியலில் நுழைந்ததிலிருந்து அமேதி தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். 2004 மக்களவை தேர்தல் முதல் அமேதியில் போட்டியிட்டு வருகிறார் ராகுல். 2004 தேர்தலில் ராகுலுக்கு 71 சதவீதம் கிடைத்த வாக்குகள் அடுத்துவந்த தேர்தல்களில் குறைந்து 2009-ல் 66, 2014-ல் 46 என்றானது. அதேசமயம், ராகுலை எதிர்த்து 2014-ல் ஸ்மிருதி இராணி போட்டியிட்ட போது பாஜக வின் வாக்கு வாங்கி மிகப்பெரிய வளர்ச்சி கண்டு 37 சதவீதம் ஆனது. இதனால் தான் இந்த முறையும் பாஜக அமேதியில் ராகுலை எதிர்த்து ஸ்ம்ரிதி இராணியை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது ராகுலுக்கு மேலுமொரு போட்டியாக காங்கிரஸில் மூத்த தலைவராக இருந்து மறைந்த ஹாஜிசுல்தான் கானின் மகன் ஹாரூண் ரஷீத் போட்டியிடுவது அங்கு ராகுலின் வாக்கு சதவீதத்தை மேலும் குறைக்கும் என கணிக்கப்படுகிறது.