Skip to main content

நள்ளிரவில் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தீவிர விசாரணை!

Published on 03/02/2025 | Edited on 03/02/2025
Petrol thrown at police station in the middle of the night

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் சுமார் 12.00 மணிக்கு இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் இரண்டு பெட்ரோல் குண்டுகளை காவல் நிலையத்தின் மீது வீசி சென்றுள்ளனர். காவல் நிலையத்தின் இரும்பு கேட் பூட்டப்பட்டிருந்ததால் (சாத்தியிருந்ததால்) அதன் மீது அடையாளம் தெரியாத நபர்கள் வீசிய கண்ணாடி பாட்டிலால் ஆன பெட்ரோல் குண்டு விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்த காவல் துறையினர் பழைய குற்றவாளிகள் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் பத்துக்கும் மேற்பட்டோரை பிடித்து வந்து சிப்காட் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நள்ளிரவில் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்