Skip to main content

கர்நாடகாவில் குஷ்பு, நக்மா பிரச்சாரம்  

Published on 21/04/2018 | Edited on 21/04/2018
kusboo

 

கர்நாடக பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ள 22 நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்.   இதில், குஷ்பு, நக்மா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்யவுள்ளனர். 

 

இதே போல், சட்டப்பேரவை தேர்தலையொட்டி கர்நாடகாவில் பாஜக சார்பில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக.   இதில்,  பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

“குஷ்புவுக்கு விரைவில் பிச்சை எடுக்கும் நிலைமை வரும்” - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
EVKS Ilangovan said Kushbu will soon find herself in a state of begging

சென்னை செங்குன்றத்தில் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க செயற்குழு உறுப்பினரும், தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு கலந்துகொண்டு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் எவ்வளவு போதைப்பொருட்கள் வந்துள்ளது. இந்த போதைப் பொருட்கள் ஒவ்வொரு இடத்திற்கும் செல்ல உள்ளது. இது குறித்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் டெல்லியில் உள்ள அதிகாரிகள் சொல்லியுள்ளனர். இதற்கு முதலமைச்சர் என்ன பதில் கொடுக்கப்போகிறார். இன்றைக்கு தாய்மார்களுக்கு 1000 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பிச்சை போட்டால் தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்களா?” எனப் பேசினார். குஷ்புவின் இந்த பேச்சு பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஷ்புவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று (13-03-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பிரதமர் மோடி, ஒரு சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். எப்படியாவது தமிழ்நாட்டு மக்களை மயக்கி, அவர்களிடம் வாக்குகளை பெற்று தமிழகத்தில் டெபாசிட்டாவது வாங்க வேண்டும் என்று முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். நாட்டு மக்கள் தன்னுடைய குடும்பம் என்று சொல்லக்கூடிய மோடிக்கு நான் சவால் விடுகிறேன். முடிந்தால், தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று டெபாசிட் வாங்கினால் உங்களை நாங்கள் பிரதமராக ஏற்றுக்கொள்கிறோம். 

மகளிருக்கு வழங்கப்படும் உரிமைத் தொகையை பிச்சை காசு என்று குஷ்பு சொல்கிறார். பிச்சை எடுப்பதில் குஷ்பு ஆர்வமாக இருக்கிறார். விரைவில் அவருக்கு அந்த நிலைமை வரும். பொய், பித்தலாட்டத்தின் மொத்த உருவமே மோடி தான். போதை பொருட்கள் எங்கிருந்து வருகிறது என்றால், குஜராத்தில், மோடியின் நண்பரான அதானியின் துறைமுகத்தில் இருந்து தான் இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

Next Story

“எல்லையைத் தாண்டி ஆடை அணிய வேண்டாம்” - குஷ்பு

Published on 07/08/2023 | Edited on 07/08/2023

 

“Don't dress beyond the limit” - Khushbu
கோப்புப் படம்

 

கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் மக்கள் சேவை மையம் சார்பில், கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் ஆணையத் தலைவருமான வானதி சீனிவாசன் மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “ஆடை சுதந்திரம் இருக்கலாம். ஒருவர் இப்படித் தான் ஆடை உடுத்த வேண்டும் இப்படி உடுத்தக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் மனிதனுக்கு ஆறாவது அறிவு ஒன்று பிறந்ததனால், நமக்கு எல்லை என்ற ஒன்று இருக்கிறது. அந்த எல்லை மீறி நாம் போக வேண்டாம். இல்லையென்றால் மிருகங்களுக்கும் நமக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போகும். நமக்குத் தெரியும் இதுதான் எல்லை என்று. அதனால் அந்த எல்லையைத் தெரிந்து கொண்டு நாம் ஆடை அணிய வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை இருக்கிறது. எனக்கு எனது புடவையை மீறி எந்த எல்லையும் தாண்டிப் போக முடியாது. சில பேருக்கு ஒரு சுதந்திரம் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் இவ்வளவு பெரிய கலாச்சாரம் இருக்கும் போது எல்லையைத் தாண்டி ஆடை அணிய வேண்டாம்” என்று கூறினார்.