கேரளாவில் தொடர்ந்து 30 ஆயிரத்தைக் கடந்து வந்த தினசரி கரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாகச் சற்று குறைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை 26,701 பேருக்கு கரோனா உறுதியானது. அதனைத்தொடர்ந்து நேற்று 19,688 பேருக்கு கரோனா உறுதியானது. அதனைத்தொடர்ந்து கடந்த 24 மணிநேரத்தில் 25,772 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
மேலும் கரோனாவல் பாதிக்கப்பட்ட 189 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், இன்று நடைபெற்ற கரோனா ஆய்வு கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4 முதல் வகுப்புகள் தொடங்கும் எனவும் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கரோனா உறுதியாகும் சதவீதம் குறைந்து வருவதால், இந்த முடிவு எடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.