Published on 14/01/2023 | Edited on 14/01/2023

கேரளா மாநிலம் சபரிமலையில் ஐயப்பன் கோவில் மகரஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மகரஜோதி ஏற்றுவதை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தொடர்ந்து ஐயப்பனுக்கு பந்தள மகாராஜா வழங்கிய தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
முன்னதாக திருவாபரணப் பெட்டிகள் ஊர்வலம் பம்பை சரங்கொத்தி வழியாக சபரிமலை சன்னிதானம் வந்தடைந்தது. இறுதியாக ஐயப்பன் கோவில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதியை சரண கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.