Skip to main content

நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்திய கேரள, தெலங்கானா எம்.பிக்கள்!

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

parliament

 

இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்தநிலையில் கேரள மாநில எம்.பிக்கள், பட்ஜெட்டில் தங்கள் மாநிலத்திற்கு பாரபட்சமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அதேபோல் ஆந்திரா-தெலங்கானா பிரிக்கப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "ஆந்திராவிலிருந்து தெலங்கானாவை பிரிப்பதற்கான செயல்பாட்டில் எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. நாடாளுமன்றத்தில் மைக்குகள் அணைக்கப்பட்டன. அவைகளின் கதவுகள் மூடப்பட்டன, காங்கிரஸ் எம்.பி.க்கள் பெப்பர் ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்தினர்.

 

பாஜக தெலுங்கானா உருவாக்கத்திற்கு எதிரானது அல்ல. ஆனால் தனி மாநிலம் உருவான விதத்தை எதிர்க்கிறது. பேச்சுவார்த்தை நடந்திருந்தால் பிரிவினை சுமுகமாகவும் அமைதியாகவும் இருந்திருக்கும். காங்கிரஸ் ஆந்திராவை பிரித்த விதத்தால் இன்றும் இரு மாநிலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன" என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்