உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. மராட்டியத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகிறது. இந்த இரு மாநிலத்திலும் இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கேரளா, கர்நாடகம், தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் மட்டும், 87.25 சதவீத கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.