மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருடன் கெளதமி சந்திப்பு
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை நடிகை கெளதமி நேற்று திடீரென சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் பின்னணி என்ன என்பது வெளிப்படையாக தெரியவில்லை. நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரி அமைச்சரை கவுதமி சந்தித்ததாக அவர் தரப்பில் சிலர் தெரிவிக்கிறார்கள். கமல் அரசியல் பிரவேசம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள சூழலில், கெளதமியின் தில்லி பயணம் கவனிக்கத்தக்கது.