Published on 13/12/2018 | Edited on 13/12/2018
தெலுங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் இன்று பதவியேற்றார். டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 73.2 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் கடந்த 11 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதியை சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சி கைப்பற்றியது. கட்சி தலைவரான சந்திரசேகர ராவ் அவர் போட்டியிட்ட தொகுதியில் 51,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதனை தொடர்ந்து ஆளுநர் முன்னிலையில் இன்று அவர் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இன்னும் ஓரிரு நாட்களில் மந்திரி சபை அமைக்கப்படும் என தெரிகிறது.