ஜம்முவின் துணை ஆணையாளர் சுஷ்மா சவுகான் நள்ளிரவில் வெளியிட்டுள்ள உத்தரவில், அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று விடுமுறை அளிக்கும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது.
![j](http://image.nakkheeran.in/cdn/farfuture/0chxo7UTKbWjRFFEE4Dh1oBVabzswayQIKdwpxyQGmA/1564977836/sites/default/files/inline-images/jammu_3.jpg)
ஜம்முவில் மொபைல் இன்டர்நெட் சேவைகளும் தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அங்கு பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து கூடுதல் படைகள் குவிக்கப்பட்ட சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் பாகிஸ்தானின் அத்துமீறல் ஆகியவற்றால் காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட கூடும் என்ற நிலையில், முன்னாள் முதல்வர்களுக்கு வீட்டு காவல் வைக்கப்பட்டு உள்ளது என போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.