கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மையான இடங்கள் யாரும் கைப்பற்றதா நிலையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது . அதே சமயம் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றிருந்தாலும் கூட மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் தலைவரும் , முன்னாள் முதல்வரும் , முன்னாள் பிரதமர் தேவகவுடா அவர்களின் மகன் குமாரசாமியை கர்நாடகா முதல்வராக அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஒப்புதல் அளித்து தற்போது கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முடிவிற்கு கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
![m b patil](http://image.nakkheeran.in/cdn/farfuture/H_3y79CG3R-yMoDs3BpfnRezoDwUB9dLteJRwrdTko0/1557299571/sites/default/files/inline-images/M%20B%20Patil%20DH-1556395402.jpg)
இந்நிலையில் அவர்களை சமாதானப்படுத்தியது காங்கிரஸ் கட்சி தலைமை. இருப்பினும் அந்த மாநிலத்தில் காங்கிரஸ் அமைச்சர்கள் ஒவ்வொரு நாளும் சர்ச்சைக்குரிய வகையிலும் , ஆட்சிக்கு எதிராகவும் பேசி வருகின்றனர்.. இதன் தொடர்ச்சியாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சரும் , அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான எம்.பி.பாட்டீல் கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா மீண்டும் பொறுப்பேற்பார் என அதிரடியாக பேசியுள்ளார். ஏற்கெனவே பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவி கிடைக்காத நிலையில் அவர்கள் அதிருப்தி நிலையில் உள்ளார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ள நிலையில் , கர்நாடக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒருவரே இப்படி பேசியுள்ளது கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல் கர்நாடக காங்கிரஸ் கட்சி மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தொண்டர்களிடையியே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.