Skip to main content

"வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துள்ளோம்" - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

karnataka deputy cm sivakumar talks about historical decision

 

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசம், 18 முதல் 25 வயது வரை உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500, அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்று  அறிவித்திருந்தது.

 

இதையடுத்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.  முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு பதவியேற்ற உடனே பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில் கர்நாடக மாநில துணை முதலமைச்சரும் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "கர்நாடகாவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை இன்று எடுத்துள்ளோம். நாங்கள் தேர்தல் பிரசாரத்தின் போது கொடுத்த 5 வாக்குறுதிகளை செயல்படுத்த உள்ளோம். அதற்கான காலக்கெடுவை நாங்கள் வழங்கியுள்ளோம். இந்த திட்டங்களுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி முன்னிலையில் கையெழுத்திட்டுள்ளோம். விரைவில் இந்த திட்டங்களை அமல்படுத்த உள்ளோம்" என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்