Published on 05/08/2020 | Edited on 05/08/2020
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடக்கு ஒடிசா, மேற்கு வங்கம் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டுள்ளது. இதனால் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஒடிசா, ஜார்கண்ட் என ஐந்து மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தென்மேற்கு அரபிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.