கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாக, சட்டப்பேரவையில் பேசி வரும் முதல்வர் குமாரசாமி. கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல் முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் நீடித்து வரும் அரசியல் குழப்பத்திற்கு குமாரசாமி முற்றுப்புள்ளி வைத்தார் . சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று மாலை உறுதியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில் முதல்வர் குமாரசாமி பதவி விலகும் முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பெங்களூரு மாநகர் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருவதால், அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.