Published on 29/07/2019 | Edited on 29/07/2019
கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை அடுத்து, கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
சபாநாயகர் இருக்கையில் இருந்து எழுந்த சபாநாயகர் ரமேஷ் குமார், துணை சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டு, சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். முந்தைய காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி அரசு கர்நாடகாவில் கவிழ்ந்ததை அடுத்து, சபாநாயகர் பதவியை ரமேஷ்குமார் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.