Skip to main content

அன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

42- வது மாநாடு ரிலையன்ஸ் குழும வருடாந்திர இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில்  ரிலையன்ஸ் மற்றும் ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றுள்ளனர். அந்த கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, அனைத்து இந்தியர்களும் டிஜிட்டல் முறையில் இணையவேண்டும் என்பதே ஜியோவின் கனவு என்றும், கடந்த ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் அதிக வளர்ச்சியை பெற்றுள்ளது என கூறினார். உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி நெட்வொர்க் நிறுவனம் என்ற பெயரை ஜியோ பெற்றுள்ளது. ஜியோவுக்கு 500 மில்லியன் சந்தாதாரர்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
 

ambani kamal

 

 

இதனை தொடர்ந்து பேசியவர், 'ஜியோ ஃபைபர்' திட்டத்தை அறிமுகப்படுத்தினார். செப்டம்பர் 5-ம் தேதி முதல் ஜியோ ஃபைபர் அறிமுகம் நடைமுறைக்கு வரும் என்றார். ஜியோ ஃபைபரில் இணையதள வேகம் நொடிக்கு 1 ஜி.பியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  ஜியோ ஃபைபர் சேவைக்கு மாதம் 700 முதல் 10000 ரூபாய் வரை சந்தாத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

அதேபோல் ஜியோ பைபர் தொடக்க சலுகையாக 4K TV & செட் டாப் பாக்ஸ் இலவசம். ஆயுட்கால சந்தாதாரராக இணைபவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை அளிக்கப்படுகிறது. ஜியோ ஃபைபர் மூலம் இணையதள சேவை, டிவி கேபிள் சேவை, தொலைத்தொடர்பு சேவை உள்ளிட்ட மூன்று சேவைகளையும் ஒரே வயர் மூலமாக வீடுகளுக்கு கொண்டு சென்று ஜியோ ஃபைபர்  திட்டம் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

மேலும் இந்த திட்டம் குறித்து பேசியவர், இந்தியாவில் ஒரு புதிய திரைப்படம் வெளியானால் அதே திரைப்படத்தை வீட்டிலிருந்தே உங்கள் ஜியோ ஃபைபர் மூலம் பார்க்கக்கூடிய வசதியை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்கிறது என்று மகிழ்ச்சியாக தெரிவித்தார்.
 

முன்னதாக இதேபோல ஒரு திட்டத்தை நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் வெளியாக இருக்கும் சமயத்தில் அறிமுகம் செய்ய காத்திருந்தார். டிடிஹெச் மூலம் விஸ்வரூபம் படத்தை தியேட்டருக்கு செல்லாமல் தன்னுடைய வீட்டில் இருந்தபடியே முன் தொகையை கட்டி பார்க்க வசதி செய்தார். ஆனால், தியேட்டர் உரிமையாளர்களின் போராட்டத்தால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது அம்பானி அறிவித்திருக்கும் இந்த திட்டம் கூட ஒருவகையில் கமல்ஹாசன் 2013ஆம் ஆண்டு விஸ்வரூபம் வெளியாகும் சமயத்தில் அறிவித்த அந்த புதுத்திட்டம் போன்றதுதான்.

 

 

சார்ந்த செய்திகள்