Published on 19/09/2020 | Edited on 19/09/2020

மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் பதிலளித்த மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வரதன், "கரோனாவை எதிர்க்கும் ஆற்றல் கபசுரக்குடிநீருக்கு இருப்பதை ஆயுஷ்துறை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் சித்த மருந்தான கபசுக்குடிநீருக்கு உள்ளது." என்றார்.
இதனிடையே, தொற்றுநோய் திருத்த மசோதாவை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வரதன் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.