Skip to main content

'சொன்னால் மட்டும் போதாது'- மடாதிபதியால் ஷாக் ஆன பொம்மை 

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

'Just talking is not enough' - criticized the abbot who kept the principal close

 

'வெள்ள பாதிப்புக்குத் தீர்வே கிடைக்கவில்லை' என மடாதிபதி ஒருவர் கர்நாடக முதல்வரை அருகில் வைத்துக் கொண்டே குற்றச்சாட்டுகளை அடுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கர்நாடக மாநிலம் பெங்களூர் மகாதேவபுரா பகுதியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கர்நாடகத்தின் முதல்வர் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மடாதிபதி ஒருவரும் பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சியில் பேசிய மடாதிபதி, 'ஒவ்வொரு முறையும் மழை வரும் பொழுது பெங்களூர் நகரில் வெள்ளம் நிற்பது வாடிக்கையாக இருக்கிறது. இதனால் மக்கள் அதிகப்படியான துயரங்களை சந்தித்து வருகின்றனர். இது வேதனை அளிக்கிறது.ஒரு முறை வெள்ளம் வந்தால் அதிகாரிகளுக்குத் தெரியாதா? ஒருமுறை மழை வந்தால் எந்தெந்த பகுதியில் நீர் தேங்கும் எனத் தெரியாதா? வாக்கு கொடுத்தால் மட்டும் போதாது அதை மட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். செய்து காண்பிக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

 

அருகில் அமர்ந்து கொண்டிருந்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆத்திரமடைந்து உடனடியாக வலுக்கட்டாயமாக மைக்கை வாங்கி கோபமாக 'வெறும் வாக்குறுதி மட்டும் கொடுக்கவில்லை இதற்கான திட்டமிட்டு நிதியை ஒதுக்கி உள்ளோம். பணிகள் நடைபெற்று வருகிறது' எனத் தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்