Skip to main content

ஜெட் ஏர்வேஸ் விமான சேவை முடங்கும் அபாயம்!

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

இந்தியாவில் விமான சேவையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வந்த ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) நிறுவனம் தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. இதன் விளைவாக நாடு முழுவதும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவையை நிறுத்தியுள்ளது. மேலும் "ஜெட் ஏர்வேஸ்" நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் பெற்று தர வேண்டும் என டெல்லியில் போராட்டம் நடத்தினர்.  இந்த போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள்  நிலுவை சம்பளத்தை நிறுவனம் உடனடியாக  வழங்க வேண்டும் என "ஜெட் ஏர்வேஸ்" நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

jet airways



"ஜெட் ஏர்வேஸ்" நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும்  "ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்" (Air India Express)  , "ஸ்பைஸ்ஜெட்" (Spice jet) , "இண்டிகோ" (Indigo) ஆகிய விமான நிறுவனங்களில் பணியில் சேர தொடங்கியுள்ளனர். இதில் 2-3 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்ற "பைலட்கள்" , விமான பராமரிப்பு பொறியாளர்கள்  உட்பட  இவர்களின் மாத சம்பளம் ரூபாய் 1,50,000 முதல் 2,00,000 வரை தர இந்த விமான நிறுவனங்கள் முன் வந்துள்ளனர். இருப்பினும் "ஜெட் ஏர்வேஸ்" நிறுவனத்தில் ஊழியர்கள் மாதம் ரூபாய் 4,00,000 வரை பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வரலாற்றில் விமான பைலட்கள் மற்றும் விமான பராமரிப்பு பொறியாளர்கள் அதிக சம்பளத்தில் இருந்து குறைந்த சம்பளத்திற்கு செல்வது . 

 

jet airways



இதுவே முதல் முறை ஆகும். முன்பு வாங்கிய மாத சம்பளத்தில் இருந்து 30-50% வீதம் வரை குறைவான சம்பளத்தையே விமான ஊழியர்கள் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (15/04/2019)  மீண்டும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் மற்றும் சுமார் 1100 பைலட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக தெரிவித்தனர். இதனால் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பணியாற்றும் மேலாளர்கள் , விமான பொறியாளர்கள் , விமான பராமரிப்பாளர்கள் உட்பட 20000 பேர் வேலை இழந்துள்ளதாக ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களின் கூட்டமைப்பின் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் நாடு முழுவதும் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


பி.சந்தோஷ் , சேலம். 
 

சார்ந்த செய்திகள்