ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் இந்நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து விமானங்களும் முற்றிலும் நிறுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினய் துபே பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே இன்று மதியம் ஜெட் ஏர்வேஸின் துணை தலைமை செயல் அதிகாரி அமித் அகர்வால் பதவி விலகியிருந்த நிலையில் , மேலும் மற்றொரு உயர் அதிகாரி பதவி விலகி இருப்பது ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்நிறுவனம் தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவி விலகியுள்ளதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல் ஏர்வேஸில் பணியாற்றிய ஊழியர்கள் , விமான பொறியாளர்கள் , விமான பைலட்டுகள் உள்ளிட்டோர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வழங்க வேண்டிய சம்பள நிலுவை தொகை வழங்காமல் இருக்கும் நிலையில் , ஏர்வேஸ் நிறுவனத்தின் அடுத்தடுத்த முக்கிய பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகள் ஒரே நாளில் ராஜினாமா செய்துள்ளனர் என்பது ஊழியர்களிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. மேலும் கச்சா எண்ணெய் விலை உயர்வு , கடன் பிரச்சனை உள்ளிட்டவற்றால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முழுமையாகவும் , நிரந்தரமாகவும் மூடப்பட்டு விடும் இதற்கு எடுத்துக்காட்டாக தான் அதிகாரிகள் ராஜினாமா செய்து வருகின்றனர்.