கர்நாடக மக்களவைத் தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட தங்களுக்கு சரியான வேட்பாளர் இல்லை எனக் கூறி மதச்சார்பற்ற ஜனதாதளம்,அந்த தொகுதியை காங்கிரஸிடம் திருப்பி கொடுத்துள்ளது.
வேட்புமனுத்தாக்கல் செய்ய ஒருநாள் மட்டுமே மீதமுள்ள நிலையில் வலிமையான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ் - மஜத கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன.
இதையடுத்து மக்களவைத் தேர்தலிலும் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் காங்கிரஸும், 8 தொகுதிகளில் மஜத -வும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பெங்களூரு வடக்கு தொகுதியில் தங்களிடம் பலமான வேட்பாளர் இல்லாததால் காங்கிரஸிடமே திருப்பி ஒப்படைப்பதாக மஜக இன்று அறிவித்துள்ளது. இதனால் ஒரே நாளில் தகுந்த வேட்பாளரை தேடி மனு தாக்கல் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது.