Published on 26/11/2019 | Edited on 26/11/2019
வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாததால் பொதுமக்களிடமிருந்து கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.1996 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச தொகையை வங்கிக்கணக்கில் இருப்பு வைத்திருக்கவில்லை எனில் அவர்களிடமிருந்து அபராத தொகையை வசூலித்து வருகின்றன. அந்த வகையில் பொதுத் துறை வங்கிகள் கடந்த நிதியாண்டில் பொதுமக்களிடமிருந்து வசூலித்த அபராத தொகை மூலம் 1,996.46 கோடி ரூபாயை கூடுதல் வருவாயாக பெற்றுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.