Skip to main content

ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது? - உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

amit shah

 

ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நிலையில், இன்று (13.02.2021) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.

 

இந்த மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய அமித் ஷா, "இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதால், ஜம்மு - காஷ்மீர் மாநில அந்தஸ்த்து பெறாது எனப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகிறார்கள். ஜம்மு - காஷ்மீர் மாநில அந்தஸ்த்து பெறாது என எங்குமே எழுதப்படவில்லை. எங்கிருந்து நீங்கள் அந்த முடிவிற்கு வருகிறீர்கள். நான் இந்த அவையில் ஏற்கனவே கூறியுள்ளேன், மீண்டும் கூறுகிறேன். இந்த மசோதாவிற்கும், ஜம்மு - காஷ்மீரின் மாநில அந்தஸ்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜம்மு -காஷ்மீருக்கு சரியான நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.

 

அதன்பிறகு மாநிலங்களவையைத் தொடர்ந்து, மக்களவையில் ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா நிறைவேறியது.

 

சார்ந்த செய்திகள்