Skip to main content

இந்திய வீரர்களில் இர்பான் பதான் செய்த முதல் சாதனை!

Published on 17/05/2019 | Edited on 17/05/2019

இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போல மற்ற நாடுகளில் பிக்பேஷ் லீக், கரீபியன் பிரீமியர் லீக், கனடா பிரீமியர் லீக், ஆஃப்கானிஸ்தான் பிரீமியர் லீக், பங்களாதேஷ் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் என டி20 லீக் தொடர்கள் நடத்துகின்றனர். இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகளில் ஆரம்ப சீசனில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடினர் பின்பு நடந்த எந்த சீசனியிலும் அவர்கள் விளையாடவில்லை.தற்போது  பாகிஸ்தானை தவிர மற்ற அனைத்து நாட்டு வீரர்களும் இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல்லில் கலந்து கொண்டு ஆடுகின்றனர். ஆனால் அதேநேரத்தில் இந்திய வீரர்கள் மற்ற நாட்டு லீக் போட்டிகளில் ஆட பிசிசிஐ அனுமதிப்பதில்லை. அதனால் இந்திய வீரர்கள் வெளிநாட்டு லீக் தொடர்களில் எந்த போட்டியிலும் விளையாடுவதில்லை.
 

irfan pathan



இந்நிலையில், இந்த ஆண்டு நடக்க இருக்கும் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதானின் பெயர் இடம்பெற்றுள்ளது. கரீபியன் பிரீமியர் லீக்கில் 6 அணிகள் ஆடுகின்றன. அவற்றில் எந்த அணிக்காக இர்ஃபான் பதான் ஆடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும், இதற்காக பிசிசிஐ-யிடமிருந்து தடையில்லா சான்று பெற்றுவிட்டாரா என்பது குறித்து எந்த விளக்கமும் இதுவரை தெரிவிக்கவில்லை.ஆனாலும் ஒரு இந்திய வீரரின் பெயர் வெளிநாட்டு லீக் தொடரின் ஏலத்திற்கான வரைவு பட்டியலில் இடம்பெற்றிருப்பதே இதுதான் முதன்முறை. பிசிசிஐ-யிடம் அனுமதி பெறாமல் இர்ஃபான் பதான் அப்ளை செய்திருக்கவும் வாய்ப்பில்லை. ஆனாலும் அதுகுறித்த தகவல் தெரியவில்லை.ஐபிஎல் போட்டிகளில் 2017ம் ஆண்டுக்கு பிறகு இர்ஃபான் பதானை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வராததால் கடந்த 2 சீசன்களிலும் அவர் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்