Skip to main content

இந்தியாவிற்கு 10-தாவது தங்கம் !!

Published on 29/08/2018 | Edited on 29/08/2018

 

 

gold

 

 

 

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா பாத்தாவது தங்கத்தை கைப்பற்றியுள்ளது.

18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனிஷியாவின் ஜகர்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் 9 தங்கம், 20 வெள்ளி மற்றும் 23 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 52 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 9-ஆவது இடத்தில் உள்ளது. 

 

நேற்று ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் மஞ்சித் சிங் தங்க பதக்கம் வென்று இந்தியாவிற்கு 9-தாவது  தங்க பதக்கத்தை பெற்றுத்தந்தார். அதே போட்டியில் இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் வெள்ளி பதக்கம் வென்று இரண்டாவது இடத்தை கைப்பற்றியிருந்தார். இந்நிலையில் மும்முறை தாண்டுதலில் 16.77 மீட்டர் தாண்டி இந்திய வீரர் அர்பிந்தர் சிங்  10-தாவது தங்கத்தை கைப்பற்றியுள்ளார்.

சார்ந்த செய்திகள்