Published on 18/12/2020 | Edited on 18/12/2020
ஐக்கிய நாடுகள் சபை, புவியின் இளம் சாதனையாளர்கள் விருதை வழங்கி வருகிறது. நிலையான சுற்றுசூழல் மாற்றத்திற்கான, சுற்று சூழலை பாதுகாக்கும் திட்டங்களை செயல்படுத்தி வரும் 7 தொழில் முனைவோர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டுக்கான ஐக்கியநாடுகள் சபையின், புவி சாதனையாளர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 7 பேரில் வித்யுத் மோகன் என்ற இந்தியரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வித்யுத் மோகன் 'டாகசார்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் விவசாய பண்ணை கழிவுகளை, கரி மற்றும் வேதிப்பொருட்களாக மாற்றுகிறது. இதன்மூலம், விவசாய கழிவுகளை எரிப்பதன் மூலம் ஏற்படும் காற்று மாசு தடுக்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கும் கூடுதல் வருமானம் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.