புல்வாமா தாக்குதல் மற்றும் அதன் பின்னதான இந்தியாவின் பதில் தாக்குதல் ஆகியவற்றிற்கு பின் பாஜக வின் செல்வாக்கு மற்றும் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது என இந்தியா டீ.வி மற்றும் சிஎன்எக்ஸ் நிறுவனம் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
அதில் தாக்குதலுக்கு பிந்தைய இந்த கருத்துக்கணிப்பின்படி உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 41 இடங்களில் பாஜக கூட்டணியும், பகுஜன் சமாஜ் கட்சி 16 இடங்களிலும், சமாஜ்வாதி 18 இடங்களிலும் வெற்றி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் தனித்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த தாக்குதலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி 49 இடங்களிலும், பாஜக கூட்டணி 29 இடங்களில் வெல்லும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. அதுபோலவே காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நடந்த இந்த கருத்துக்கணிப்பில் இந்தியா பாகிஸ்தான் சண்டைக்கு பின் உத்தரப்பிரதேசத்தில் பாஜக செல்வாக்கு உயர்ந்திருப்பதாகவும், இந்தியா முழுவதும் இதே மனநிலை நீடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.