Published on 21/10/2019 | Edited on 21/10/2019
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அஞ்சல் சேவையை பாகிஸ்தான் ஒரு தலைபட்சமாக நிறுத்தியுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது பேசிய மத்திய தகவல் தொடர்பு துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது, "பாகிஸ்தான் அஞ்சல் சேவையை ஒரு தலைபட்சமாக நிறுத்தியுள்ளது. எந்த முன் அறிவிப்பையும் பாகிஸ்தான் அளிக்கவில்லை. பாகிஸ்தானின் செயல் சர்வதேச விதிகளை மீறியதாகும்" என்றார். மேலும், எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், இந்தியாவுக்கு தபால்துறை கடிதங்களை அனுப்புவதை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.