Skip to main content

இந்தியாவில் 600-ஐ கடந்த  ஒமிக்ரான் பாதிப்பு!

Published on 28/12/2021 | Edited on 28/12/2021

 

omicron

 

உலகை தற்போது அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஒமிக்ரான் கரோனாவின் பாதிப்பு, இந்தியாவிலும் வேகமாக அதிகரித்துவருகிறது. தற்போது நாட்டில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-ஐ கடந்துள்ளது. தற்போதுவரை நாட்டில் 653 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அதில் 186பேர் குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

இந்தியாவில் அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 167 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 61 குணமடைந்துள்ளனர். மஹாராஷ்ட்ராவுக்கு அடுத்ததாக டெல்லியில் 165 பேருக்கு ஒமிக்ரான் கரோனா உறுதியாகியுள்ளது. இதில் 23 பேர் குணமடைந்துள்ளனர். அதிக  ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் கேரளா உள்ளது. அம்மாநிலத்தில் 57 பேர்  ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

தமிழ்நாட்டில் 34 பேருக்கு இதுவரை  ஒமிக்ரான்   உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 16 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கிடையே கரோனா அதிகரிப்பு மற்றும் ஒமிக்ரான் அச்சத்தால் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்