Skip to main content

'இந்தியாவில் ஒரே நாளில் 10 லட்சம் கரோனா மாதிரிகள் பரிசோதனை'- ஐ.சி.எம்.ஆர். தகவல்!

Published on 22/08/2020 | Edited on 22/08/2020

 

india coronavirus samples tested icmr

 

 

நாடு முழுவதும் நேற்று வரை (21/08/2020) மொத்தம் 3,44,91,073 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

 

அதேபோல் நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் (21/08/2020) மட்டும் 10.23 லட்சம் கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 42.94 லட்சம் கரோனா மாதிரிகள் செய்யப்பட்டுள்ளது. 

 

தமிழகத்தில் நேற்று (21/08/2020) வரை மொத்தம் 40,62,943 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று (21/08/2020) மட்டும் தமிழகத்தில் 74,344 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, புதுச்சேரி, டெல்லி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநில அரசுகளும் நாள்தோறும் கரோனா பரிசோதனைகளை தங்களது மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்