Skip to main content

மேம்பாலத்தில் சிக்கிக்கொண்ட விமானம்

Published on 15/11/2022 | Edited on 15/11/2022

 

flight from Kochi to Hyderabad got stuck on a road flyover

 

வெளிநாடுகளில் பழைய விமானங்களை வாங்கி, அதில் ஹோட்டல் நடத்துவது மிகவும் பிரபலம். அந்த வகையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல பிஸ்தா கவுஸ் என்ற நிறுவனம் மக்களைக் கவர்வதற்காகப் பழைய விமானங்களை வாங்கி ஹோட்டலாக மாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளது. 

 

இதற்காக அந்நிறுவனம் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து பழைய விமானம் ஒன்றை ஏலத்தில் வாங்கி சாலை மார்க்கமாக ஒரு பெரிய லாரியின் மூலம் ஹைதராபாத்திற்குக் கொண்டு சென்றது. அப்போது, ஆந்திர மாநிலம் பாபட்லா அருகே வந்தபோது மேதரமெட்லா என்ற பகுதியில் அமைந்திருந்த மேம்பாலத்தின் அடியில் விமானம் சிக்கிக் கொண்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இதைப் பார்க்க குவிந்த மக்கள் விமானம் சிக்கிக்கொண்டதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நிலையில், அது வைரலானது. 

 

இதனிடையே தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் கடும் போராட்டத்திற்குப் பிறகு மேம்பாலத்தில் சிக்கிக்கொண்ட விமானத்தை முழுவதுமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதன் பிறகு அந்த விமானம் வேறு வழியில் ஹைதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்