கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியா முழுவதும் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு அடிமட்டத் தொழிலாளர்கள் தங்களது அன்றாட ஊதியத்தை இழந்து, உணவிற்கே தத்தளித்து வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக வெளி மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் கடைநிலை ஊழியர்கள் கடுமையான பசிக்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் வைரலாகும் காட்சிகள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நிஹாம்பூர் யமுனை ஆற்றின் அருகில் குப்பையில் வீசப்பட்ட அழுகிய வாழைப்பழங்களில் நல்ல வாழைப்பழங்களை தேடி எடுத்து உண்ணும் நிலைக்கு பிற மாநில ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பது பெரும் கொடுமையாக உள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தும் இது தொடர்பான புகைப்படங்கள், காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.