மேற்கு வங்க மாநிலத்தில் சட்டவிரோத பசுக்கள் கடத்தல் வழக்கில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனுப்ரதா மோண்டல் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
2015, 2017 ஆம் ஆண்டுகளில் மேற்குவங்க மாநிலம் எல்லை வழியாக வங்கதேசத்திற்கு 20,000 கால்நடைகள் சட்ட விரோதமாகக் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அதில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனுப்ரதா மோண்டல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க 10 முறைக்கு மேல் சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.
ஆனால், அவர் சி.பி.ஐ. முன் ஆஜராகவில்லை. இதனையடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் இருந்த பார்த்தா சாட்டர்ஜ, ஆசிரியர் பணி நியமன மோசடியில் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அனுப்ரதா மோண்டல் கைது செய்யப்பட்டிருப்பது மேற்குவங்க அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.