Skip to main content

தேவை என்றால் இன்னொரு சர்ஜிகல் ஸ்டிரைக் நடக்கும் - ராணுவ தளபதி

Published on 26/09/2017 | Edited on 26/09/2017

தேவை என்றால் இன்னொரு சர்ஜிகல் ஸ்டிரைக் நடக்கும் - ராணுவ தளபதி

எல்லைக்கோட்டிற்கு அருகாமையில் இருக்கும் தீவிரவாத முகாம்களிலிருந்து நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்திய ராணுவம் தீவிரவாதிகளை “வரவேற்று” வரிசையாக அவர்களை சவக்குழிக்குள் அனுப்ப தயாராகவுள்ளது என்று ராவத் கூறினார்.

“தேவை என்றால் எங்களது செய்தியின்படி நடந்து கொள்வோம்” என்றார் ராவத்.



“இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்” (சிறிதும் அச்சமற்ற இந்தியர்கள்) எனும் தலைப்பிலான புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் லந்துகொண்ட இந்திய இராணுவத்தளபதி பிபின் ராவத், ‘பாகிஸ்தான் இராணுவத்துடன் உரையாடல் நடத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் தான் உதவியது. அவர்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒருவேளை அவர்களுக்குப் புரியவில்லை என்றால், தேவைப்பட்டால் இன்னொரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தவும் நாம் தயாராக இருக்கிறோம். இந்த முறை தாக்குதல் வேறு வடிவத்தில் வித்தியாசமானதாக இருக்கும். இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் மாதிரியான தாக்குதல்களை மேற்கொள்ளும் அளவிற்கு வலிமையான நாடு. தேசபாதுகாப்பிற்கு இதுமாதிரியான தாக்குதல்கள் தேவையானவையாக இருக்கின்றன’ என அவர் தெரிவித்துள்ளார்.

 கடந்த ஆண்டு செப்டம்பர் 28-29 தேதிகளின் நள்ளிரவில் இந்திய ராணுவம் எல்லை தாண்டி சென்று சில தீவிரவாத முகாம்களை அழித்தது. தீவிரவாதிகளின் தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து எல்லைத்தாண்டிய தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள்  கொல்லப்பட்டனர் எனும் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

சார்ந்த செய்திகள்