கரோனா பாதித்த ஒரு நபர், தங்களை அறியாமலேயே அதனை 406 பேருக்குப் பரப்ப வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
![icmr about corona spreading](http://image.nakkheeran.in/cdn/farfuture/ouwS_E48Nt22782ik7jdq6PKJ1La72J1s_7p6BuADQ0/1586340789/sites/default/files/inline-images/gdfgdf_1.jpg)
உலகம் முழுவதும் கரோனா வைரசால், சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 82,000க்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர், 3,02,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் இந்த வைரஸ் 5000க்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ள நிலையில்,நூற்றுக்கும் மேற்பட்டோர் இதனால் பலியாகியுள்ளனர்.இதனையடுத்து இந்த வைரசைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் கரோனா பாதித்த ஒரு நபர்,தங்களை அறியாமலேயே அதனை 406 பேருக்குப் பரப்ப வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.கரோனா குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில்,கரோனா பாதிக்கப்பட்ட நபர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியில் சுற்றினால்,ஒரு மாதத்தில் 406 பேருக்கு அவரால் கரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.