Published on 25/03/2019 | Edited on 25/03/2019
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 7000 கோடி கடனில் சிக்கி தவிக்கிறது. பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலையில் கடந்த 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து நரேஷ் கோயல் விலக முடிவு செய்துள்ளார்.
மேலும் அவரது மனைவியும், ஜெட் ஏர்வேஸ் நிறுவன இயக்குநருமான அனிதா கோயலும் தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். மேலும் இவர்களுடன் சேர்த்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை நிர்வகித்து வந்த எத்திஹாட் விமான நிறுவனத்தின் பிரதிநிதியும் விளக்கியுள்ளார். இவர்கள் இருவரும் பதவி விலகிய நிலையில் அந்நிறுவனத்திற்கு தற்போது 1500 கோடி நிதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.