Skip to main content

"இது தொடர்ந்தால் சாவர்க்கரை தேசத்தந்தை ஆக்கிவிடுவார்கள்" - ஓவைசி விமர்சனம்!

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

Asaduddin Owaisi

 

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று (12.10.2021) சாவர்க்கர் பற்றிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் சாவர்க்கரை மகாத்மா காந்திதான் மன்னிப்பு கேட்கச் சொன்னார் என தெரிவித்தார்.

 

இதுதொடர்பாக அவர், "சாவர்க்கரைப் பற்றிய பொய்கள் மீண்டும் மீண்டும் பரப்பப்படுகின்றன. சிறையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் பல கருணை மனுக்களைத் தாக்கல் செய்தார் என்று  பரப்பப்படுகிறது. மகாத்மா காந்திதான் அவரை கருணை மனுக்களைத் தாக்கல் செய்யுமாறு கூறினார்" என தெரிவித்தார்.

 

udanpirape

 

இந்தநிலையில் ராஜ்நாத் சிங்கின் கருத்தை அசாதுதீன் ஓவைசி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், "அவர்கள் (பாஜக) திரிக்கப்பட்ட வரலாற்றை முன்வைக்கின்றனர். இது தொடர்ந்தால் மகாத்மா காந்தியை நீக்கிவிட்டு, மகாத்மா காந்தியின் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவரும், காந்தியின் கொலையில் சம்மந்தப்பட்டவர் என நீதிபதி ஜீவன் லால் கபூரின் விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்டவருமான சாவர்க்கரை தேசத்தந்தை ஆக்கிவிடுவார்கள்" என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்