
பாஜக வின் இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் புகார் மீடு இயக்கத்தின் மூலம் சமூக வலைதளத்தில் கொடுத்துள்ளார். பலர் இதனை பற்றி அவரிடமும், பாஜகவைச் சேர்ந்த பெண் எம்பிகள் மீதும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், இதற்கு அக்பர் பதிலளிக்கவே இல்லை. தற்போது மீடு இயக்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ள ஒரு சிறப்பு குழுவையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், அக்பரின் மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து சுப்பிரமணியன் சுவாமி தெரிவிக்கையில், “ ஒருவர் மட்டும் அவரின் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கவில்லை, பலர் அவரின் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கின்றனர். நான் மீடு இயக்கத்திற்கு ஆதரவு அளிக்கிறேன். பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட நிலையை காலம் கடந்துவந்து சொல்வதில் எந்த தவறும் இல்லை. பிரதமர் இதை பற்றி பேச வேண்டும்” என்றார்.