Published on 24/10/2019 | Edited on 24/10/2019
மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா என இரண்டு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மேலும் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் தற்போது நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி ஒடிஷாவில் நடைபெற்ற ஒரு சட்டமன்ற இடைத்தேர்தலில் பிஜு தனதா தளம் முன்னிலையில் உள்ளது.
உ.பியில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான நிலவரம், பாஜக-6, சமாஜ்வாதி-2, காங்-1, பகுஜன் சமாஜ்-1, அப்னா தளம்-1 .
கேரளாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட்-2, காங்-2, இந்திய முஸ்லீம் லீக்-1.
குஜராத்தில் மொத்தம் 6 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக-3, காங்-3 என்று போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் நடைபெற்று வரும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.