தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் அறிவித்துள்ளார்.
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒடிசாவில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒடிசா தேர்தல் பிஜு ஜனதா தளம் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு வி.கே.பாண்டியனே காரணம் என விமர்சனங்கள் எழுந்திருந்தது. முன்னதாகவே 'எனது அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் இல்லை' என நவீன் பட்நாயக் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வி.கே.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மக்களுக்கு சேவையாற்றவே ஐஏஎஸ் பணிக்கு வந்தேன். கொரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தோம். அதன் மூலம் ஒடிசா மக்களின் அன்பைப் பெற்றேன். ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு உதவி புரியவே அரசியலுக்கு வந்தேன். பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை. மூதாதையர்களின் சொத்துக்கள் தான் தற்போது என் வசம் உள்ளது. நான் ஐஏஎஸ் ஆகும் போது இருந்த சொத்துக்களே இப்போது என்னிடம் உள்ளது' என தெரிவித்துள்ளார்.