Skip to main content

மருத்துவமனை ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் தாயின் இறந்த உடலை மகன் பைக்கில் எடுத்துச்சென்ற அவலம்!!

Published on 11/07/2018 | Edited on 11/07/2018

 

மத்தியபிரதேசத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த தாயை கொண்டுசெல்ல அமரர் ஊர்தி தர மருத்துவ நிர்வாகம் மறுத்ததால் இறந்த தாயின் உடலை இருசக்கர வாகனத்திலேயே இளைஞர் எடுத்து சென்ற பரிதாபம் நடந்துள்ளது.

 

 

 

மத்தியபிரதேசம் மாநிலம் மோகன்வாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழந்துள்ளார். தனது தாயின் உடலை எடுத்து செல்ல அவரது மகன் மருத்துவமனை ஊழியர்களிடம் அமரர் ஊர்தி கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் கைவிரித்ததாலும் கையில் பணமில்லாததாலும் தான் கொண்டுவந்த இருசக்கர வாகனத்திலேயே இறந்த தாயின் உடலை அமர வைத்து எடுத்து சென்றுள்ளார்.

 

மருத்துவமனையின் இந்த மனிதாபிமானமற்ற செயலை கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். இளைஞர்  தனது  தாயின்  உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பிரச்சாரம்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நெகிழ்ச்சி செயல்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
election campaign; Minister Udayanidhi Stalin's resilience

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டிருந்தார்.

அப்போது அந்த சாலை வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இருப்பினும் அங்கிருந்த கூட்ட நெரிசலால் அவ்விடத்தை விட்டு ஆம்புலன்ஸால் நகர முடியவில்லை. அதனைக் கண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆம்புலன்சிற்கு வழிவிடும் விதமாக உடனடியாக தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார். அதன் பின்னர் அம்புலன்ஸ் அந்த இடத்தை விட்டு கடந்து சென்றது. இச்சம்பவம் அங்கிருந்த திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மட்டுமின்றி பொதுமக்களையும் நெகிழ்ச்சியடையச் செய்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலூர் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து வாணியம்பாடியில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

Next Story

இறந்தும் பலருக்கு வாழ்வளிக்கும் முதியவர்; மரியாதை செலுத்திய அரசு

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
State Honors at Funeral of Organ Donors in Trichy

தமிழகத்தில் இறந்த பிறகும் தமது உறுப்புகளை வழங்கி பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்கும் நபர்களின் இறுதிசடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டத்தைச் சேர்ந்த வீரப்பன்(80) என்பவர் வாகன விபத்தில் சிக்கி திருச்சி அரசு  தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார். அவரது  கல்லீரல் கார்னியா, தோல் தானமாக பெறப்பட்டது.  வீரப்பன் உடலுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி,  மருத்துவமனை முதல்வர் நேரு,  எம்.எஸ்.அருண் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  அதனை தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் சாலையின் இருமருங்கிலும் நின்று ராயல் சல்யூட் வைத்து வேனை வழியனுப்பி   வைத்தனர்.

கடந்த 2007 - 2008 ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞரால் இந்த  உடல் உறுப்பு தான திட்டம் கொண்டு வரப்பட்டது.  உலகிலேயே உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது. சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் இவற்றில் ஒரு பகுதியை தானமாகத் தரலாம்.  விபத்துகளின்போது மூளைச் சாவு அடையும் நபர்களின் குடும்பத்தினர் சம்மதித்தால் 9 பேருக்கு அந்த நபர் வாழ்க்கை தர இயலும். கண்களின் கார்னியா மூலம் இருவருக்கு பார்வை கிடைக்கும். இரண்டு சிறுநீரகங்களை இருவருக்குப் பொருத்தலாம். நுரையீலையும், கல்லீரலையும், மண்ணீரலையும் தலா இரண்டு நோயாளிகளுக்குப் பயன்படுத்தலாம். தவிர இதயத்தையும் மாற்ற முடியும்.   நவீன மருத்துவ முன்னேற்றத்தின் விளைவாக இதயத்தின் வால்வுகள், எலும்புகள், லிகமண்ட்ஸ், தோல் இவற்றையும் கூட இன்னொருவருக்கு பயன்படுத்த இயலும்.