Published on 29/04/2020 | Edited on 29/04/2020
இந்தியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள நிலையில், உரிய கட்டுப்பாடுகளை பின்பற்றி வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை அழைத்து கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தங்களது மாநிலங்களை சேர்ந்தவர்களை, அந்தந்த மாநில அரசுகள் அழைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்களை அழைத்துக் கொள்ளலாம். சிக்கியவர்களை அழைத்துக்கொள்ள மாநில அரசுகள் சிறப்பு அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுக்கலாம்.
அனுப்பும் மாநிலத்திற்கும், ஏற்றுக்கொள்ளும் மாநிலத்திற்கும் இடையே ஒருமித்த கருத்து இருந்தால் மட்டுமே அழைக்கலாம். அழைத்துச் செல்ல பயன்படுத்தும் பேருந்துகளில் கிருமி நாசினி தெளித்து தனிநபர் இடைவெளி போன்றவற்றை கடைபிடிப்பது அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.