Skip to main content

இந்தியாவில் அதிகரிக்கும் உயர்தர கார் விற்பனை...!

Published on 09/01/2019 | Edited on 09/01/2019


உயர்தர கார் வகைகளான பென்ஸ், பி.எம்.டபிள்யூ, ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் வோல்வோ ஆகிய நிறுவனங்களின் கார் விற்பனை கடந்த 2018-ம் ஆண்டில் அதிகமாகியிருக்கிறது. ஒவ்வொரு நிறுவனங்களும் தனது கடந்த ஆண்டு விற்பனை பட்டியலை வெளியிட்டுள்ளன அதன் விவரங்கள். 

 

bb

 


பென்ஸ் : 1.4% உயர்வு

 

2018 - 15,538
 

2017 - 15,330

 

 

b

 


பி.எம்.டபிள்யூ : 13% உயர்வு

 

2018 - 11,105
 

2017 - 9,800

 

ll

 

 

டாடா மோட்டார்ஸ் ஜாகுவார் லேண்ட் ரோவர் : 16.23% உயர்வு

 

2018 - 4,596
 

2017 - 3,954

 

vv

 

 

வோல்வோ : 30% உயர்வு

 

2018 - 2,638
 

2017 - 2,029

 

என அனைத்து உயர்தர கார்களும் இந்தியாவில், கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு விற்பனையில் உயர்ந்துள்ளது. இதில் ஆடி நிறுவனம் இன்னும் 2018-ம் ஆண்டுக்கான விற்பனைப் பட்டியலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சென்ற கார் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! 

Published on 30/10/2022 | Edited on 30/10/2022

 

admk former ministers car incident police investigation

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சென்ற கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் 10- க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்ததோடு நான்கு பேர் காயமடைந்தனர். 

 

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி, இன்று (30/10/2022) காலை 10.00 மணியளவில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களுமான காமராஜ், சி.விஜயபாஸ்கர், பாஸ்கரன் ஆகியோர் திருவாரூரில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்திற்கு சென்றுக் கொண்டிருந்தனர். 

 

அப்போது, அவர்களது வாகனங்கள் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே நெடுஞ்சாலையில் முன்னும், பின்னுமாக சென்றுக் கொண்டிருந்தது. போட்டிப் போட்டுக் கொண்டு சென்றதால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் முன்னாள் அமைச்சர்கள் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர். 

 

அவர்களுடன் வந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.  

 

Next Story

கார் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு!

Published on 11/02/2022 | Edited on 11/02/2022

 

Federal Government issues action order to car manufacturers!

 

காரின் பின்னிருக்கையில் நடுவில் அமருவோருக்கும் சீட் பெல்ட் அமைக்க வாகன நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

 

கார்களின் முதல் வரிசையில் இரண்டு இருக்கைகள் மற்றும் பின் வரிசையில் இரண்டு ஓர இருக்கைகளுக்கு முன்முனை சீட் பெல்ட் வசதி  வழங்கப்படுகிறது. பின்வரிசைகளில் நடு இருக்கைகளுக்கு விமானங்களில் இருப்பது போல இரு முனை சீட் பெல்ட் ஒதுக்கப்படுகிறது. இனி நடு இருக்கைகளுக்கும் முன்முனை சீட் பெல்ட் அமைப்பதை வாகன நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதை மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

 

ஆண்டுதோறும் சராசரியாக ஐந்து லட்சம் சாலை விபத்துகள் நடப்பதாகவும், அவற்றில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.